நெட்டப்பாக்கம் : புதுச்சேரியில் ஜி.20 மாநாடு முன்னிட்டு,நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஏரிப்பாக்கம், மடுகரை ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மடுகரையில் நடந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி செயற்பொறியாளர் பாலசுப்பரமணியன், இளநிலை பொறியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.