நெல்லிக்குப்பம், : காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி, பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். மனமுடைந்த பெண்ணின் தந்தை தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் அடுத்த புதுக்கடையை சேர்ந்த ராமஜெயன் மகள் வினிதினி, 23. இவரும், திருவந்திபுரத்தை சேர்ந்த முருகன் மகன் பவித்ரன் என்பவரும் காதலித்து வந்தனர்.
இதையறிந்த ராமஜெயன், நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு மகள் வினிதினியை அனுப்பி வைத்தார். அங்கிருந்த வினிதினி, பவித்ரனுடன் சென்று திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், புதுமண தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு, நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
மகள் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த ராமஜெயன், தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை, குடும்பத்தினர் மீடடு, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ராமஜெயன் தற்கொலைக்கு முயன்றதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், புதுமண தம்பதி போலீஸ் நிலையம் வந்திருப்பதை அறிந்து, போலீஸ் நிலையத்தில் ஆவேசத்துடன் திரண்டதால் பதற்றம் நிலவியது. அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.