மந்தாரக்குப்பம் : குறவன்குப்பம் பகுதியில், கடலுார் எஸ்.பி., யின் பாதுகாப்பு வாகனம் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் பகுதியில், கடலுார் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று இரவு 9:15 மணியளவில், கடலுார் எஸ்.பி., சக்திகணேசன் சென்று கொண்டிருந்தார்.
எஸ்.பி., வாகனத்திற்கு பின்னால், டிஎன்31 ஜி1055 என்ற பதிவெண் கொண்ட பாதுகாப்பு வாகனம் சென்றது. எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
விபத்தில் பாதுகாப்பு வாகனத்தின் முன்புறம் சேதமடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து குறித்து, மந்தாரக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.