சிதம்பரம் : சிதம்பரம் அருகே, பாசன வேளாண்மையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், மாதிரி கிராம அறிமுக கூட்டம் நடந்தது.
குமராட்சி வட்டாரத்திற்குட்பட்ட பெராம்பட்டு ஊராட்சியில், பாசன வேளாண்மை நவீனமயமாக்கும் திட்டம் 2022--23 கீழ், கொள்ளிடம் உப வடிநிலப்பகுதியில் மாதிரி கிராமம் ஏற்படுத்துவதற்கான அறிமுக கூட்டம் நடந்தது.
வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பிரேம்சாந்தி தலைமை தாங்கி, மாதிரி கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பேசினார். குமராட்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அமிர்தராஜ் வரவேற்றார்.
மாவட்ட வேளாண் துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பல்வேறு துறைகள் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். தோட்டக்கலை துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன், மீன்வள மேற்பார்வையாளர் கவிதா, சிதம்பரம் நீர்வள ஆதாரத்துறை சுந்தரேசன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் மாதிரி கிராமத்தில் தங்களது துறை சார்பில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.
ஊராட்சி மன்ற தலைவர் சிவாஜி, துணைத் தலைவர் விமலா மற்றும் பெராம்பட்டு பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, துணை வேளாண் அலுவலர் நடராஜன், உதவி வேளாண் அலுவலர் மாலினி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரகாஷ், தண்டபாணி ஆகியோர் செய்திருந்தனர்.