பரங்கிப்பேட்டை : மாவட்ட தி.மு.க., சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில், பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்க அலுவலகம் திறப்பு விழா, உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பை வழங்கும் விழா நடந்தது.
பரங்கிப்பேட்டையில் நடந்த இந்த விழாவுக்கு, துணை சேர்மன் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார்.
மீரா பள்ளி முதன்மை நிர்வாகி ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், சேர்மன் தேன்மொழி சங்கர், நகர தி.மு.க., செயலர் முனைவர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹசன் பசர் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக, ஒன்றிய செயலர் முத்துப்பெருமாள் பங்கேற்று, பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தை திறந்து வைத்து, உலமாக்களுக்கு இலவச சைக்கிள், பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பையை வழங்கினார்.
விழாவில், தொழிலதிபர் முகமது ஹனிபா, எம்.கே.எம்.எஸ்., கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் பஷிருல்லா, தர்மம் செய்வோம் குழும செயலர் ஹாஜலி, முன்னாள் துணை சேர்மன்கள் செழியன், நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் சங்கர், பாண்டியன், கவுன்சிலர்கள் ஆனந்தன், ஜாபர் ஷரீப், வழக்கறிஞர் தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஐக்கிய ஜமா அத் முன்னாள் பொதுச்செயலர் ஹமீது கவுஸ் நன்றி கூறினார்.