சென்னை : வீடூர் அணையில் இருந்து, இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, வீடூர் அணையில் இருந்து, திண்டிவனம் மற்றும் வானுார் தாலுகா பகுதிகளுக்கு, நடப்பாண்டு பாசனத்திற்கு, இன்று முதல் ஜூன், 15 வரை, 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், விழுப்புரம் மாவட்டத்தில், 2,200 ஏக்கர்; புதுச்சேரி மாநிலத்தில், 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.