கோவை : ''இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48' என்ற திட்டத்தில் இதுவரை, 125.42 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது,'' என, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் பேசினார்.
இதில், சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் பேசியதாவது:
நாட்டிலேயே தமிழகத்தில் அதிகளவு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. ஆண்டுக்கு, 10 ஆயிரத்து, 828 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கப்படுகின்றனர். இந்தாண்டு அதிகபட்சமாக, 565 கிராமப்புற மற்றும் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னைக்கு அடுத்து கோவையில் அதிகளவில் மருத்துவ வசதிகள் உள்ளன. தமிழக முதல்வர், 708 மருத்துவமனைகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்படும் என, சட்டசபையில் தெரிவித்தார்.
அதில், தலா ஒரு டாக்டர், மருந்தாளுநர், மருத்துவ உதவியாளர், சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். கோவை மாநகராட்சியில் மட்டும், 64 மருத்துவமனைகள் உட்பட மாவட்டத்தில், 72 மருத்துவமனைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
பிப்., இறுதிக்குள் இந்த, 708 மருத்துவமனைகளில், 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் ஒரே நேரத்தில் துவங்கி வைக்கப்பட உள்ளன. 'இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம், 48' திட்டத்தில், 2.76 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, 679 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை, 125.42 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
மருத்துவமனை டீன் ரவீந்திரன், மாநில மருத்துவக் கல்லுாரி இயக்குனர் சாந்திமலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.