இதுகுறித்து, கொடிசியா தலைவர் திருஞானம், கண்காட்சி தலைவர் சிவகுமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும், 3 முதல், 6ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில், 250 நிறுவனங்கள் சார்பில், 290 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கட்டட ஆட்டோமேஷன், கட்டுமான வேதிப்பொருட்கள், 'பிரீகாஸ்ட்' கட்டடங்கள், கழிவு மேலாண்மை சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைக்கின்றனர்.
காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை கண்காட்சி நடைபெறும்.கண்காட்சிக்கு வருவோர் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். நேரடி வருகையின்போது நிறுவன அடையாள அட்டை அல்லது 'விசிட்டிங் கார்டு' அவசியம். நுழைவுக் கட்டணம், 50 ரூபாய்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.