வெண்ணந்துார்: வெண்ணந்துாரில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், நாளை நடக்கிறது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம், ஒன்றியம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை பிப்.,2ம் தேதி வெண்ணந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் நடக்கிறது. காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், அடையாள அட்டை வழங்குதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனை அடிப்படையில் இலவச உதவி உபகரணங்களும் வழங்கப்படும். எனவே, மாற்றுத்திறன் மாணவர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் நான்கு, ஆதார், தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவை, தலா இரண்டு நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்று பயன் அடையலாம்.