பள்ளிபாளையம்: பாப்பம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க, பள்ளிபாளையம் பொன்னி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் முனியப்பன் கோவில் வளாகத்தில், ஆலையின் கரும்பு விவசாயிகளின் சங்கத்தின் துணைத்தலைவர் செங்கோட்டையன் தலைமையில் நடந்தது. மாநில துணை தலைவர் நல்லாகவுண்டர் பேசினார்.
கூட்டத்தில், கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் குறைந்தபட்ச விலையாக அரசு அறிவிக்க வேண்டும் என, வலியுறுத்தி நடக்கும், கரும்பு விவசாயிகளின் கோரிக்கை மனு தபால் இயக்கம் தொடர்ந்து நடத்திட முடிவு செய்யப்பட்டது.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி, பிப்.,17ம் தேதி சென்னை கோட்டை முன் முற்றுகை போராட்டத்தில் கரும்பு
விவசாயிகள் சென்று கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டார். சங்கத்தின் பொருளாளர் நடேசன் நன்றி கூறினார்.