State level mens and womens basketball tournament starts today | மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டி இன்று துவக்கம் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டி இன்று துவக்கம்
Added : பிப் 01, 2023 | |
Advertisement
 


நாமக்கல்: நாமக்கல்லில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, இன்று துவங்கி, ஐந்து நாள் நடக்கிறது.
நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் திருச்செங்கோடு, பி.ஆர்.டி., ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில், 23வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று துவங்குகிறது. போட்டிகள், பகல் மற்றும் இரவு மின்னொளியில், நாக் அவுட் முறையிலும், தொடர்ந்து லீக் முறையிலும் நடக்கிறது.

ஆண்கள் கூடைப்பந்து பிரிவில், 24 அணிகளும், பெண்கள் பிரிவில், 11 அணிகளும் என மொத்தம், 36 அணிகள் கலந்துகொள்கின்றன. இன்று மாலை, 6:00 மணிக்கு துவங்கும் துவக்க விழாவுக்கு, திருச்செங்கோடு பி.ஆர்.டி., குரூப்ஸ் சேர்மன் பரந்தாமன், மாநில கூடைப்பந்து கழக செயலாளர் அஜீஸ் அகமத் ஆகியோர் தலைமை வக்கின்றனர். நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி., கலைச்செல்வன் ஆகியோர் போட்டியை துவக்கி வைக்கின்றனர்.
போட்டிகளில் வெற்றிபெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு தனித்தனியாக, முதல் பரிசு, 60 ஆயிரம், 2ம் பரிசு, 50 ஆயிரம், 3ம் பரிசு, 40 ஆயிரம், 4ம் பரிசு, 30 ஆயிரம் ரூபாய் மற்றும் சிறந்த ஆட்டக்காரருக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
ஏற்பாடுகளை நாமக்கல் கூடைப்பந்து கழக தலைவர் நடராஜன், திருச்செங்கோடு பி.ஆர்.டி., ஸ்போர்ட்ஸ் சங்க சேர்மன் பரந்தாமன், கூடைப்பந்து கழக சேர்மன் பாண்டியராஜன், செயலாளர் முரளி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X