பள்ளிபாளையம்: 'ஜனதாநகர் பகுதியில் மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும்'
என, அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பள்ளிபாளையம் அருகே ஒடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
இந்த தண்ணீர் தேக்கத்தால், ஜனதாநகர் குடியிருப்பு பகுதி பாதிக்கப்பட்டது. அப்போது மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. நீர்தேக்கம் பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் மாற்று இடத்திற்கு சென்று விட்டனர். ஆனால், மேடான பகுதியில், 30 வீடுகள் உள்ளன.
இந்த மேடான குடியிருப்பு பகுதியிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பல ஆண்டாக அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
சமந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.