கோவை : கோவை குளத்துப்பாளையம் கே.பி.ஆர். காலனியை சேர்ந்தவர் கருப்புசாமி, 51; சவரத் தொழிலாளி. இரு தினங்களுக்கு முன் இரவு, தனது நண்பர் ராஜேஷ்குமார், 34 என்பவருடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
பாலக்காடு பிரதான ரோடு, குளத்துப்பாளையம் சந்திப்பு அருகே, பைக் மோதி, கருப்புசாமி மற்றும் ராஜேஷ்குமார் துாக்கி வீசப்பட்டனர். பைக்கில் வந்த கோவைப்புதுார் அறிவொளி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி கோபிநாத், 20, பாலக்காடு ஒட்டப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார், 34, கோவை மாச்சம்பாளையத்தை சேர்ந்த ஹூசைன், 19 ஆகிய மூவரும் கீழே விழுந்தனர்.
படுகாயமடைந்த ஐந்து பேரும், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே கருப்புசாமி உயிரிழந்தார். கோபிநாத் நேற்று உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.