கோவை: கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாததால், 152 கட்டடங்கள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன. அதன்பின், 3 கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது.
கோவை மாநகராட்சியில், நீண்ட நாட்களாக வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போர் கண்டறியப்பட்டு, நோட்டீஸ் வினியோகிப்பதோடு, 'சீல்' வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டுக்கான நிலுவை வரியில் ரூ.30.25 கோடி, நடப்பு வரியில் ரூ.206.87 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, ரூ.237.12 கோடி வசூலாகி இருக்கிறது.
ரூ.67.88 லட்சம் சொத்து வரி நிலுவைக்காக, 8 குடிநீர் இணைப்பு, ரூ.9.98 லட்சம் நிலுவைக்காக ஒரு பாதாள சாக்கடை இணைப்பு, ரூ.4.30 கோடி நிலுவைக்காக, 11 கட்டடங்கள் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டன. 152 கட்டடங்கள் 'சீல்' வைத்ததை தொடர்ந்து, ரூ.3.05 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை நிலுவையின்றி செலுத்தி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்க்க, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.