தூத்துக்குடி:தூத்துக்குடியில் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் 34. ரயில்வேயில் வேலையில் சேர முயற்சித்து வந்தார்.
அவரிடம் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாரியப்பன் 65, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கீழமுந்தலை சேர்ந்த சந்திரன் மகன் ராஜேஸ்வரன் 28, மற்றும்
சிலர் சேர்ந்து ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கடந்த ஆண்டு பல தவணைகளில் ரூ. 30 லட்சம் பெற்றனர்.
முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரரை மேற்கு வங்காளம் ஹவுராவுக்கு அழைத்துச் சென்று மெடிக்கல் செக்கப், போலிச் சான்றிதழ் வாங்கி கொடுத்து ரயில்வே பணிக்கு பயிற்சி எனக் கூறி டெல்லி, கொல்கத்தா என பல இடங்களுக்கும் அலைக்கழித்துள்ளனர்.
வேலை கிடைக்காமல் ஏமாற்றமடைந்த முத்துகிருஷ்ணன் தூத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணனிடம் புகார் செய்தார். மாரியப்பன், ராஜேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் பலரிடமும் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடியே 28 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.