தென்காசி:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்பனூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தனராஜ் மகள் கவினா 6. ஆலங்குளம் லட்சுமி நர்சரி பள்ளியில் யு.கே.ஜி., பயின்று வந்தார்.
நேற்று மாலை 5:00 மணியளவில் பள்ளியில் இருந்து வந்த வேனில் வீட்டு முன்பாக இறங்கினார். வேன் கிளம்பும்போது சிறுமி தடுமாறி பின் டயரில் விழுந்து காயமுற்றார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுமி பலியானார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.