மேட்டூர்:மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 1,154 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழைக்கேற்ப மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும்.நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 1,072 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று, 1,154 கனஅடியாக சற்று அதிகரித்தது.
அணை நீர்மட்டம், 103.71 அடி, நீர் இருப்பு, 69.73 டி.எம்.சி.,யாக காணப்பட்டது. அணையில் இருந்து, 1,000 கனஅடி நீர் குடிநீருக்கு திறக்கப்பட்டது.