புதுச்சேரியில் 50 மின்சார பஸ்களை இயக்க திட்டம்: மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை
Added : பிப் 02, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Plan to operate 50 electric buses in Puducherry: Measures to curb pollution  புதுச்சேரியில் 50 மின்சார பஸ்களை இயக்க திட்டம்: மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை



நாட்டில் மக்கள் தொகைக்கேற்ப வாகனங்களின் எணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் பொதுப் போக்குவரத்தை சார்ந்திருப்பதும், நிலையான போக்குவரத்து அமைப்புகளின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளன.

பெருகி வரும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால், காற்று மாசுபடுவதால் அஸ்துமா, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், ஓசோன் படத்தில் ஓட்டை விழுந்துள்ளதால், தட்ப வெப்ப நிலையில் பல மாறுதல் ஏற்பட்டு வருகிறது.

இதனை கட்டுப்படுத்திட இந்தியாவில் மத்திய அரசும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மக்கள் விருப்பத்தில் மாற்றத்தை கொண்டு வந்து, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக பொது போக்குவரத்திற்கு மின்சார பஸ்கள் சாதகமான தேர்வாக பார்க்கப்படுகிறது. பல மாநிலங்களில் மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகமான பி.ஆர்.டி.சி.,யிலும் மின்சார பஸ்களையும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ' சூற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டும், டீசல் விலையேற்றம் காரணமாக ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும் புதுச்சேரி பி.ஆர்.டி.சி.,யில் மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பஸ்களை தயார் செய்ய டெண்டர் விட பணிகள் நடந்து வருகிறது. புதுச்சேரி நகரப் பகுதிகளில் 9 மீ., நீளம் கொண்ட மின்சார பஸ்கள் 25 எண்ணிக்கையிலும், புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள தமிழக பகுதிகளுக்கு 12 மீ., நீளம் கொண்ட 25 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

அதில், புதுச்சேரி நகரப்பகுதியில் 15 பஸ்கள் குளிர்சாதன வசதியுடனும், மீதமுள்ள 10 பஸ்கள் சாதாரண பஸ்களாகவும் இயக்கப்படும். இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பகுதிகளுக்கு பஸ்களை தனியார் பங்களிப்புடன் இயக்கப்பட உள்ளது.

மின்சார பஸ்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையம் அமைக்க இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் ஏற்றினால், 200 கி.மீ., துாரம் இயக்க முடியும். மின்சார பஸ்களை இந்தாண்டிற்குள் நடைமுறைக்கு கொண்டுவரும் நோக்கில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X