கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த பருத்தி வார சந்தையில் ரூ.12.75 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நடத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் நடக்கும் பருத்தி வார சந்தைக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலர் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு 455 மூட்டைகள், கொட்டு ரகம் 105 மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வரப்பட்டன. எல்.ஆர்.ஏ., ரகம் அதிகபட்சம் ரூ. 8,567, குறைந்தபட்சம் ரூ.7,189க்கும், கொட்டு ரகம் அதிகபட்சம் ரூ.6,219, குறைந்தபட்சம் ரூ.3,299கும் விலை போனது.
அதன்படி 172 விவசாயிகள் கொண்டு வந்த மொத்தம் 560 பஞ்சு மூட்டைகளும் 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.