திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், கஜேந்திரன், உதவி தலைமை ஆசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர்.
டாக்டர்கள் சிவராமன், மணிகண்டன், கணேஷ், ராஜா, ரேவதி ஆகியோர், முகாமில் பங்கேற்ற 150 மாற்றுத்திறன் மாணவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவது குறித்து ஆய்வு செய்தனர்.
மாவட்ட பிரிப்பின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் என்ற அடையாளத்துடன் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை, கள்ளக்குறிச்சி மாவட்டம் என பெயர் மாற்றம் செய்வது, பஸ், ரயில் பயண அட்டை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஆசிரியர் பயிற்றுனர்கள் ரோசாலிபாய், ஜெயலட்சுமி, முரளி, கலியபெருமாள், சிறப்பு பயிற்றுநர்கள் ஜெயசீலன், சுமையா, சுமதி, கலா, கிருஷ்ணபிரியா, இயன்முறை மருத்துவர் இளவரசன், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயபாலன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
உளுந்துார்பேட்டை
உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
மாற்றுத்திறன் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், நடந்த முகாமிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் முத்துசாமி, கீதாலட்சுமி வாழ்த்துரை வழங்கினர்.
முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
ஆசிரியர் பயிற்றுனர்கள் காசிலிங்கம், அரசு, சுரேஷ், ரம்யா, சரிதா, ஆறுமுகம், சிறப்பு பயிற்றுனர்கள் கோமதி, ஜானகிராமன், ராஜலட்சுமி, சரண்யா, எண் முறை மருத்துவர் ராஜா, மாற்றுத்திறன் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.