கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் பா.ஜ., ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்தது.
பா.ஜ., ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் மஞ்சுநாதன் வரவேற்றார். கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ., அல்லது கட்சி ஆதரவுடன் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய பணியாற்றுதல், பிரதமர் நரேந்திரமோடி செயல்படுத்திய அரசு நலத்திட்டங்களை கிராம மக்களிடத்தில் கொண்டு செல்லுதல்.
அனைத்து கிராமங்களிலும் கட்சியினை பலப்படுத்தி, புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்துதல் உட்பட பல்வேறு பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன், வீரமணி, ராகுல், விமல், எழில்ராஜா, குமார், நெடுஞ்செழியன், கார்த்திகேயன், தங்க ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.