ஈரோடு: ''இரட்டை இலை சின்னம் எங்களிடம்தான் உள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஈரோட்டில், அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் பேசுகையில்,''அ.தி.மு.க.,வுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று கூறியவர்கள், வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் திணறியதை அனைவரும் பார்த்தோம். அவர்களுக்கு கடைசி வரை ஆள் கிடைக்கவில்லை. இரட்டை தலைமை வேண்டும் என்று கூறியவர்கள் உடனடியாக வேட்பாளரை அறிவித்துள்ளோம். கட்சி
யில் எல்லோரும் இணைந்து ஒத்த கருத்துடன் முடிவை எடுக்க வேண்டும். முடிவை எடுத்தோம்; கவிழ்த்தோம் என முடிவு எடுக்கக்கூடாது. 50 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட சின்னம் இரட்டை இலை சின்னம். அதனை முடக்க பன்னீர்செல்வம் ஒரு காலத்திலும் துணை போக மாட்டார். எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா, கிடைக்காத என்பது தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.
இரட்டை இலை சின்னம் தற்போதுக்கு எங்களிடம்தான் உள்ளது. நாங்கள் தான் கழக ஒருங்கிணைப்பாளரை கொண்டுள்ளோம். அதேநேரம், கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் கையெழுத்து போட்டு கொடுத்தால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்,'' என்றார்.