குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டதில், பக்தர்கள், ரூ.3.70 லட்சம் செலுத்தியிருந்தது தெரியவந்தது.
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் மாலை, கோவில் செயல் அலுவலர் நித்யா தலைமையில் கோவில் ஆய்வாளர்கள், பணியாளர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. 6 உண்டியல்களில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்து 320 இருந்தது தெரியவந்தது. இந்த பணம் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில், கோவில் பணியாளர்கள், அரசு பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.