குளித்தலை: குளித்தலை அருகே, மருதுார் மற்றும் நங்கவரம் டவுன் பஞ்சாயத்துகளில் கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நடந்தது.
குளித்தலை அருகே, மருதுார் டவுன் பஞ்., சாதாரண கூட்டம் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக பணியாளர் சரவணகுமார் தீர்மானங்களை வாசித்தார்.
இதில் மேட்டுமருதுாரில் குழந்தைகள் மையத்துக்கு புதிய கட்டடம் கட்டுதல், மேட்டுமருதுாரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட அரசு இடத்தில் கம்பி வேலி அமைத்தல் என்பன உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், கவுன்சிலர்கள், இளநிலை உதவியாளர் சேட், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், நங்கவரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம், தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இதில், 15வது நிதிகுழு திட்டத்தில் அனைத்து வார்டுகளுக்கும் பணிகள் தேர்வு செய்தல் உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.