கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது.
இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது: ஒவ்வொருவருக்கும் மனித நேயம் அவசியம் இருக்க வேண்டும். ஜாதி, மத, வேறுபாடு இருக்க கூடாது. அனைவரும் சமம் என்ற கோட்பாட்டில் இருந்து யாரும் வெளியே வந்து விடக்கூடாது. மாணவர்கள் எவ்வளவு உயர்ந்த இடத்தை அடைந்தாலும் மனிதநேயத்தை சொல்லிலும் செயலிலும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மனித நேயம் குறித்து நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., லியாகத், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொறுப்பு) சந்தியா, அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உறுப்பினர் லெட்சுமணன், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் மைதிலி உட்பட பலர் பங்கேற்றனர்.