ஈரோடு: மொடக்குறிச்சி உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நேற்று, 8,070 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 23.49 முதல், 27.69 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 3,088 கிலோ எடையுள்ள தேங்காய், 77 ஆயிரத்து, 435 ரூபாய்க்கு விற்பனையானது.
இதுபோல், 97 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 75.10 முதல், 83.50 ரூபாய் வரையிலும்; இரண்டாம் தரம், 50.10 முதல், 74.60 ரூபாய் வரை விற்பனையானது.
மொத்தம், 3,193 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 2 லட்சத்து, 46 ஆயிரத்து, 311 ரூபாய்க்கு விற்பனையானது. இவை இரண்டும் சேர்த்து, 3 லட்சத்து, 23 ஆயிரத்து, 746 ரூபாய்க்கு விலை போனது.