பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை ரோட்டில், சேரன் நகர் அருகே விபத்து நடக்கும் இடத்தில், போலீசார், 'பேரிகார்டு' அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி - கோவை ரோட்டில், சேரன் நகர் அருகே, ரோடு திரும்பும் இடம் இறக்கமாக உள்ளதால், அதிவேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகிறது.
இதுவரை மூன்று விபத்துகள் இதே நடத்தில் நடந்துள்ளன. இங்கு விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், அப்பகுதியில், விபத்துகளை கட்டுப்படுத்த திட்டமிட்ட மகாலிங்கபுரம் எஸ்.ஐ., திருமலைசாமி மற்றும் போலீசார், ரோட்டின் வளைவான பகுதிகளில், பேரிகார்டு அமைத்தனர்.
மேலும், மஞ்சள் நிற பெயின்ட்டில் வட்டம் போட்டு, விபத்து பகுதி என்பதை குறிப்பிட்டுள்ளனர். போலீசார் கூறுகையில், 'இந்த பகுதியில், நான்கு உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. விபத்துக்களை கட்டுப்படுத்த திட்டமிட்டு, பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம், மூன்று இடங்களில், மஞ்சள் நிற பெயின்ட் அடித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வாகனங்களில் வேகமாக செல்ல வேண்டாம் என, பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.