அடையாறு, திருவான்மியூர், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சூர்யா, 28. கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன; சரித்திர பதிவேடு குற்றவாளி.
இவர், 2022 மே 25ல், அடையாறு காவல் துணை கமிஷனர் முன் ஆஜரானார். அப்போது, திருந்தி வாழ்வதாகவும், ஓராண்டுக்கு எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.
இந்நிலையில், டிச., 21ல், ஒரு வாலிபரை தாக்கிய சம்பவத்தில், திருவான்மியூர் போலீசார், இவரை கைது செய்தனர்.
இதனால், நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, 155 நாட்கள் சூர்யாவை சிறையில் அடைக்க, அடையாறு காவல் துணை ஆணையர் மகேந்திரன் உத்தரவிட்டார்.