சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, போஸ்டல் நகரைச் சேர்ந்தவர் தேன்மொழி, 29.
ஜன., 25ல், வீட்டில் நிறுத்தியிருந்த இவரது சொகுசு கார் திருடுபோனது. சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், தேன்மொழியின் சகோதரரும், மென் பொறியாளருமான ஆதி நாராயாணன், 26, என்பவர், காரை திருடியது தெரியவந்தது.
ஆதிநாராயணன் மற்றும் உடந்தையாக இருந்த ஜமீன் ராயபேட்டையைச் சேர்ந்த அரவிந்தன், 21, ஆகிய இருவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், தந்தை, அனைத்து சொத்துகளையும் சகோதரி பெயரில் எழுதி வைத்து விட்டு இறந்ததால், சகோதரியை பழிவாங்குவதற்காக காரை திருடியது தெரியவந்தது.