சோழவந்தான்:காரில் கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் துவரிமான் ரோட்டில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேர் காரில் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தனர்.
இதையடுத்து, கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த நசாருதீன்ஷா, 25, முத்தாலிப், 24, பாலக்காடு மன்சூர் அலி, 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 100 கிலோ கஞ்சா, கார், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.