நீலாங்கரை, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திரா, 24. நேற்று இரவு, நீலாங்கரையில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில், நண்பர்கள் நான்கு பேருடன் அமர்ந்து மது அருந்தினார்.
அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த நான்கு பேரும் சேர்ந்து, கத்தியால் ராகவேந்திராவை குத்தி கொலை செய்தனர்.
தப்பி ஓட முயன்ற அவர்களை, பொதுமக்கள் உதவியுடன் நீலாங்கரை போலீசார் பிடித்தனர். எதற்காக கொலை செய்தார்கள் என, அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.