காசிமேடு, தண்டையார்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 27; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கஸ்துாரி, 'டைடல் பார்க்'கில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இருவரும், வீட்டில் இருந்து பணிபுரிகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, கதவை திறந்து வைத்து, ஓர் அறையில் பணிபுரிந்தனர். நள்ளிரவு 1:40 மணிக்கு வெளியே வந்து பார்த்த போது, மற்றொரு அறையில், பீரோவில் இருந்த 27 சவரன் தங்க நகைகள் மாயமானதாக கூறப்படுகிறது.
காசிமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.