திருவொற்றியூர், திருவொற்றியூரைச் சேர்ந்த 38 வயது பெண், கணவரை பிரிந்து ஒரு ஆண்டாக தனியே வசிக்கிறார். இவருடன், 2022ல் பழக்கமாகி காதலித்து வந்த யுவராஜ், 39, என்பவர், சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, யுவராஜ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். நாளடைவில் அந்த பெண், திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது, யுவராஜ் அதற்கு மறுத்து, அப்பெண்ணை தாக்கி துன்புறுத்தியுள்ளார்.
இது குறித்து அந்த பெண், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், யுவராஜை கைது செய்து, நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.