தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், தெரு நாய் தொல்லை கட்டுக்கடங்காத அளவிற்கு பெருகிவிட்டது.
சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் இவை, அவ்வழியாக செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கின்றன.
இது தொடர்பாக, தினமும் புகார் வந்த வண்ணம் இருந்தாலும், நடவடிக்கை தீவிரப்படுத்தவில்லை.
சில நாட்களுக்கு முன், குரோம்பேட்டையில் டியூசன் முடிந்து வீட்டிற்கு சென்ற பிளஸ் 1 மாணவி, தெரு நாய் துரத்தியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, நாய்களை பிடித்து, கருத்தடை செய்யும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
அந்த வகையில், நான்கு நாட்களில் மட்டும், நுாறு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை, பாரதிபுரம், கருத்தடை மையத்தில் வைத்து, மாநகராட்சி அலுவலர்கள் பராமரித்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.