தரமணி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா ஆச்சாரி, 55. தரமணியில் கொத்தனாராக பணி புரிகிறார்.
இவர், ஊருக்கு சென்று சென்னை திரும்பும்போது, 5 முதல் 10 கிலோ கஞ்சா எடுத்து வந்து, இப்பகுதியில் விற்பனை செய்வது வழக்கம்.
நேற்று முன்தினம் ஒடிசாவில் இருந்து வரும்போது, அவரது தோள்பை முழுதும் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
தரமணி போலீசார், அவரை கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல, கிண்டி ரயில் நிலையம் அருகே, கஞ்சாவுடன் நின்ற கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெகன், 23, என்பவரை கைது செய்த போலீசார், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.