போடி:தேனி மாவட்டம், போடியில், அயிரை மீன் கிலோ, 1,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த அயிரை மீன், ஆறுகளில் நீர் வரத்து குறைந்தால் மட்டுமே பிடிக்க முடியும். கேரளா, குரங்கணி மலைப்பகுதியில் பெய்யும் சாரல் மழையால், போடி கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவங்கியுள்ளது.
இங்கு பலமணி நேரம் காத்திருந்து, கிராமத்தினர் அயிரை மீன் பிடிக்கின்றனர். வரத்து குறைந்துள்ளதால், மீனுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், கிலோ, 800 ரூபாய் விற்ற அயிரை மீன், தற்போது 1,400 ரூபாய் வரை விற்பனையாகிறது.