பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர், புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, 55, மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலரிடம், ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5 லட்சம் ரூபாய் பெற்றார்.
ஆனால், ரஷ்யாவிற்கு அனுப்பாமலும், கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்தார். பாதிக்கப்பட்டவர்கள், பரமக்குடி எமனேஸ்வரம் போலீசில் புகார் அளித்தனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி கருப்பையா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.