திருச்சி:மதுரை, ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி, 34. இவர், தன் உறவினர்களுடன் காரில், நேற்று முன்தினம் மாலை புதுச்சேரிக்கு சென்றார்.
வழியில், திருச்சி அருகே சமயபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ஹோட்டலில், இரவு 8:00 மணிக்கு காரை நிறுத்தி விட்டு, அனைவரும் சாப்பிட சென்றனர்.திரும்பி வந்து பார்த்த போது, கார் கண்ணாடியை உடைத்து, கைப்பையில் இருந்த, 13 கிராம் தங்க நகை, 50 கிராம் வெள்ளி, 62 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி இருந்தனர்.
ரேவதி அளித்த புகார்படி, சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரிக்கின்றனர்.