ஊட்டி:தேசிய அளவில் ஆண்டுதோறும் சான்றிதழ் ' ஏ' என்.சி.சி., தேர்வு அனைத்து மாநிலங்களில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில், 31 தமிழ்நாடு தனி அணி என்.சி.சி., அமைப்பின் சார்பில் கர்னல் சீனிவாஸ் தலைமையில், ஊட்டி, குன்னுார், கூடலுார் மையங்களில் நடந்தது. 300 என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்று, செய்முறை தேர்வு, எழுத்து தேர்வு எழுதினர். தேர்வில் துப்பாக்கி கையாளுதல், 'மேப் ரீடிங்', நடைபயிற்சி நடத்தப்பட்டது.
ஊட்டியில் சி.எம்.எம்-- சி.எஸ்.ஐ., ஜோசப், நஞ்சநாடு, எடக்காடு, சாம்ராஜ், மஞ்சூர், லாரன்ஸ் பள்ளிகள் பங்கேற்றன. தேர்வினை என்.சி.சி., முதன்மை அதிகாரிகள் சுப்ரமணியன், காமராஜ், சீனிவாசன், ரேவதி, யூபர்ட், ஜாய் ஆகியோர் நடத்தினர். அவில்தார்கள் வருண்குமார், ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.