மதுரை-மதுரை கிழக்கு ஒன்றியம் யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் சார்பில் சிறப்பு முகாமை கலெக்டர் அனீஷ்சேகர் துவக்கி வைத்தார்.
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பரிசோதனை, மாற்றுத்திறன் மதிப்பீடு, அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்குவதற்கான பதிவு உட்பட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், சி.இ.ஓ., கார்த்திகா, மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ், திட்ட அலுவலர் கார்மேகம், கல்வி அலுவலர்கள் ஜான்சி, எஸ்தர், தலைமை ஆசிரியர் சசித்ரா, வளமைய மேற்பார்வையாளர் முத்துக்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சூரியகலா, செந்தில்வேல் குமரன் பங்கேற்றனர்.
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி ஒன்றியம் தும்பைபட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்படும் சமுதாய கூட பணிகள் மற்றும் நெல் கொள்முதல் நிலையம், கச்சிராயன்பட்டியில் மயானத்தின் பணிகள், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த அமைக்கப்படும் செங்குத்து நீர் உறிஞ்சும் குழி, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டுமான பணிகளை கலெக்டர் அனீஷ்சேகர் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொறியாளர் கணேசன், ஊராட்சி தலைவர் அயூப்கான் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனிருந்தனர்.