ஈரோடு-ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட ௧௦௦ பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய, கட்சியினருடன் ஊர்வலமாக சென்றார். போலீசார் தடுத்து அறிவுறுத்திய பிறகே, நான்கு பேருடன் மட்டும் மனுத்தாக்கல் செய்ய சென்றார்.
இந்நிலையில் வேட்பாளர் மேனகா, அக்கட்சியை சேர்ந்த, 100 பேர் மீது, உரிய அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமீறி போக்குவரத்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றது தொடர்பான பிரிவில், ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில் வேட்பாளர் சேர்க்கப்பட்டுள்ளதால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா என்பதை தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்ய வேண்டும், என போலீஸார் தெரிவித்தனர்.