கடலுார்-கடலுார் ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் மாவட்ட அளவிலான கைப்பந்து விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.
ஸ்ரீ மகாலட்சுமி கல்வி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 5ம் ஆண்டு கடலுார் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கைப்பந்து விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.
கடலுார் பூண்டியாங்குப்பம் ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த போட்டியில் கடலுார் மாவட்ட பள்ளிகளை சேர்ந்த 290 மாணவர்கள், 17 அணிகளாக பங்கேற்றனர்.
முதலிடத்தை கடலுார் செயின்ட் ஜோசப் பள்ளியும், நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளி இரண்டாம் இடத்தையும், கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைபள்ளி மூன்றாம் இடத்தையும், குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி கல்விக் குழுமங்களின் தவைவர் ரவி, தாளாளர் தேவகி, துணைத் தலைவர் ராக்கவ் தினேஷ் பரிசு வழங்கினர். இதில் , கல்லுாரி முதல்வர் சின்ராஜ், மோலளர் விஜகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி ஆஷ்லி, உடற்கல்வி இயக்குனர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கு மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் கல்வி பயிலுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.