திண்டுக்கல்- திண்டுக்கல் நேருஜி நினைவு நகராட்சி உயர்நிலை பள்ளியில் 1973ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த முன்னாள் மாணவர்கள் முதல் சந்திப்பு கூட்டம் 2021 ஆக.21ல் நடந்த நிலையில், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி வகுப்பறைக்கான 12 கரும்பலகைகளை ரூ.50 ஆயிரம் செலவில் புனரமைத்து கொடுக்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டு முதல் 10,12 வகுப்பு பொதுதேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு 5 ஆயிரம், 3ஆயிரம், 2 ஆயிரம் வீதம் கல்வி ஊக்குவிப்பு தொகையாக வழங்க உள்ளதாக, முன்னாள் மாணவர்கள் குழு தலைவர் தேவதாஸ், செயலாளர் கேசவன் தெரிவித்தனர்.