ஓசூர் : ''சூளகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர்,'' என, கிருஷ்ணகிரி எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் கூறினார்.
அனைத்து கால்நடைகளையும் சோதனை செய்ய வேண்டும். 'பேரி கார்டு' அமைத்து, பாதுகாப்பாக எருது விடும் விழா நடத்த வேண்டும்.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்குமாறு போராட்டம் நடந்துள்ளது. சூளகிரி அருகே நடந்த போராட்டத்தில், போலீசாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. எவ்வளவு வாகனங்கள் சேதமாகி உள்ளன என, சரியாக கூற முடியாது.
கலவரத்திற்கு காரணம் யார் என்பதை அறிய, வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று இனி, தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சம்பவமும் நடக்காது.
பிரச்னை செய்தவர்களை கைது செய்ய உள்ளோம். கல் எறிந்த போராட்டக்காரர்கள், 'கலெக்டர் அனுமதி வேண்டாம்; அரசாணை வேண்டாம்; எருது விடும் விழாவிற்கு அனுமதி வேண்டும்' என, கேட்கின்றனர். அப்படி அனுமதி வழங்க முடியாது.
இவ்வாறு, அவர் கூறினார்.