உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சென்ட், 46. இவர், சென்னை அருகே தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
வின்சென்ட் , உத்திரமேரூரில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு மது வாங்க சென்றார்.
அப்போது, 6 'குவாட்டர்' பாட்டில்கள் வாங்கிய வின்சென்ட்டிடம் மது பாட்டில்களின் விலையை காட்டிலும், 60 ரூபாய் கூடுதலாக விற்பனையாளர்கள் கேட்டுள்ளனர்.
குவாட்டருக்கு 10 ரூபாய் வீதம் கூடுதலாக கேட்பது குறித்து, 'டாஸ்மாக்' கடை விற்பனையாளரிடம், வின்சென்ட் கேள்வி கேட்டதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து, வின்சென்ட் மீது விற்பனையாளர் ஒருவர் தாக்கி உள்ளார்.
இதில், காயம் அடைந்த வின்சென்ட், உத்திரமேரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.