வடபழநி:சென்னை, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் 9வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் நசீமா, 39. இவர், கோடம்பாக்கம், பாரதீஸ்வரன் காலனி முதல் குறுக்குத் தெரு பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 1ம் தேதி இரவு கடைக்கு வந்த மர்ம நபர், நசீமாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, கையால் தாக்கி, 3,000 ரூபாயை பறித்ததுடன், கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார்.
இது குறித்து வடபழநி போலீசார் விசாரித்தனர். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின்படி, ரகளையில் ஈடுபட்டது, பெரும்பாக்கம், எழில் நகரில் ரவுடியாக வலம் வரும் அய்யப்பன், 32, என்பது தெரியவந்தது.
இதையடுத்து, நேற்று அய்யப்பனை வடபழநி போலீசார் கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், கோடம்பாக்கம் காவல் நிலைய பழைய குற்றவாளி அய்யப்பன் என்பதும், இவர் மீது ஒரு கொலை, இரண்டு கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.