தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகரில், அனுமதியின்றி விளம்பர 'பேனர்' வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக, விளம்பர பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர், பழைய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில், அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்துள்ளதாக, மாநகராட்சி இளநிலை பொறியாளர் கண்ணதாசன், தஞ்சாவூர் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த, புதுச்சேரி, அரியங்குப்பத்தைச் சேர்ந்த அரவிந்த், 27, என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.