கோவை;பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான 'சி ஜோன்' கிரிக்கெட் போட்டி, மலுமிச்சம்பட்டி, எஸ்.என்.எம்.வி., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. இதில், 21 அணிகள் பங்கேற்றது. இதில், நேற்று நடந்த இரண்டாம் சுற்றுப்போட்டியில், வி.எல்.பி., கல்லுாரி அணியும், ஸ்ரீநாராணயகுரு கல்லுாரி அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரீநாராணயகுரு கல்லுாரி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வி.எல்.பி., கல்லுாரி அணி, 25 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 244 ரன் எடுத்தது. அணியில் சிறப்பாக பேட் செய்த ராகுல்- 75, ஜீவா- 100 ரன் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய ஸ்ரீநாராணயகுரு கல்லுாரி அணி 11.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 30 ரன் மட்டுமே எடுத்து, 214 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்து வீசிய ரமேஷ்-3, சிவா-2 விக்கெட்களை வீழ்த்தினர்.