கோவை;அவிநாசி ரோடு, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் 'பிரைமரி' பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு விளையாட்டு போட்டிகள் நேற்று, நடந்தது.
பள்ளியின் சார்பில், மாணவ- மாணவிகளை விளையாட்டு திறனை மேம்படுத்த ஆண்டு தோறும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இவ்வாண்டு 50மீ., 75மீ., 100மீ., நீளம்தாண்டுதல், 'சாப்ட் பால்' எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
நேற்று, மாணவ- மாணவிகளுக்கான 50மீ., 75மீ., 100மீ., பிரிவுகளில் போட்டி நடந்தது.
போட்டியின் முடிவில் அதிக புள்ளிகள் பெற்ற 'உல்ப்ஸ்' அணி ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மல்லிகா தாமோதரன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கினார்.
பள்ளி தாளாளர் பிலிப் ஆர் ஜே பவுலர், முதல்வர் செலின் வினோதினி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.