கோவை:மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி, 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இன்டர்பாலிடெனிக் அத்லெடிக் அசோசியேஷன் சார்பில், கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பாலிடெனிக் கல்லுாரி மாணவர்களுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் கோவை, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், 14 அணிகள் பங்கேற்றது.
பரபரப்பான இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணியும், நாச்சிமுத்து பாலிடெக்னிக் அணியும் மோதின. முதலில் விளைாடிய பி.எஸ்.ஜி., அணி, 25 ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு, 126 ரன் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய நாச்சிமுத்து அணியினர் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 23.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு, 76 ரன் மட்டுமே எடுத்து, 50 ரன் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியின் முதல்வர் கிரிராஜ் கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.